குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.20 லட்சம் மோசடி ..!

0 2657

கடலூர் அருகே டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி பட்டதாரி இளைஞரிடம் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பாஞ்சாலம் என்பவரது மகனை அணுகிய நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ஜெயபால் - சுகந்தி தம்பதியும், அவர்களது நண்பர்களான டேனியல்ராஜ், ராஜா ஆகியோரும், தேர்வில் தேர்ச்சி பெற வைத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாஞ்சாலம், 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டேனியல் ராஜ் பண மோசடி வழக்கில் கைதானதை அறிந்த பாஞ்சாலம், சுகந்தியை சந்தித்து பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாஞ்சாலம் அளித்த புகாரின் பேரில், சுகந்தியை கைது செய்த போலீசார், மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments