விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது ஏற்பட்ட விபரீதம்.. சம்பவ இடத்திலேயே 6 பெண் கூலித்தொழிலாளர்கள் பலி..!

0 3600

ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் மீது மின்கம்பி விழுந்ததில் 6 பெண் கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

அனந்தபூர் மாவட்டத்திலுள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்ற போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது.

இதில் மின்சாரம் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,படுகாயமடைந்த மூன்று பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் குறித்து அனந்தபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments