3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகளின் சாவிகளை வழங்கினார் பிரதமர் மோடி..!

0 2985

பிரதமரின் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தெற்கு டெல்லியில்3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வளாகத்தில் வீடுகளின் சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.

40 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்த சிலர் இதனால் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகி பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

இத்திட்டம் ஏழை பணக்காரர் இடையிலான இடைவெளியை குறைக்கும் என்று பிரதமர் மோடி தமது பேச்சில் குறிப்பிட்டார்.

டெல்லியின் வளர்ச்சியை சுட்டிக்காட்டி பேசிய மோடி, துரதிர்ஷ்டவசமாக இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர் பலர் வறுமையிலும் மிகவும் மோசமான குடியிருப்புகளிலும் வசித்து வருவதாகவும், புதிய வீடுகள் கிடைப்பதால் ஆயிரக்கணக்கான குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments