அம்மான்னா சும்மா இல்லடா... குட்டிகளுக்காக ஏங்கி நின்ற பாசமுள்ள வாயில்லா ஜீவன்..!

0 5690

மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களுக்கும் தாய் பாசம் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், மழை - வெள்ளத்தில் சிக்கிய குட்டிகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சேர்த்த தாயின் பாசப்போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

 பருவ மழை காலம் துவங்கியுள்ள நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கன மழை கொட்டித்தீர்த்ததால், பட்டாளம் மழைநீர் தேங்கி, குளம் போல காட்சி அளிக்கின்றது.

இந்த வெள்ள நீரால் மக்களை போல, வாயில்லா ஜீவன்களும் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெருவில் நாய் ஒன்று, தான் ஈன்ற நான்கு குட்டிகளையும் எங்கு கூட்டிச்செல்வது என்பது தெரியாமல் ஒரு வீட்டின் குட்டி சுவற்றில் தூக்கிக் கொண்டு வைக்க  அங்கும் தண்ணீர் புகுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றது

இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள், குட்டிகளுடன் பரிதவிக்கும் வாயில்லா ஜீவனுக்கு உதவ முன்வந்தனர்.  4  குட்டிகளையும் முதலில் மீட்டு மிதவையில் வைத்து, தாயை அழைத்தனர்.

முதலில் குட்டிகள் பாதுகாப்பாக செல்லட்டும் என்று அங்கேயே நின்று கொண்ட தாய், குட்டிகள் கரை சேர்க்கப்பட்டதை கண்டதும், நீருக்குள் குதித்து
வேக வேகமாக கரையை நோக்கிச்சென்றது

முதலில் குட்டிகள் பாதுகாப்பாக செல்லட்டும் என்று அங்கேயே நின்று கொண்ட தாய், குட்டிகள் கரை சேர்க்கப்பட்டதை கண்டதும், நீருக்குள் குதித்து
வேக வேகமாக கரையை நோக்கிச்சென்றது

மழைநீர் தேங்காத ஒரு வீட்டிற்குள் அவற்றைத் தங்க வைத்து, அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் உணவளித்தனர்

இந்த சம்பவம், தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களும் தாய் பாசத்தில் மனிதர்களையே மிஞ்சிவிடும் என்பதையும், தாய்மை என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது என்பதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

மழைக்காலங்களில் இதுபோன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் உணவளித்து பராமரிக்க மாநகராட்சி சார்பில் ஏதேனும்
நடவடிக்கை மேற்கொண்டால், பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments