சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறப்பு..!

0 2670

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்பதால், சிறுகளத்துர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் மற்றும் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, புழல் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments