இடிந்து விழும் நிலையில் கண்ணமங்களம் அரசுப்பள்ளி - அவலநிலையை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியை..!

0 3164

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்களம் பேரூராட்சியின் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்று, எப்போது இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தால் 148 மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாக கண்ணீர் மல்க பேசிய வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில், இன்று காலையில் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சித் துறையினர் திடீரென ஜேசிபி வாகனத்துடன் வந்து பள்ளியின் கட்டடத்தை இடித்தனர்.

எனினும், மாற்று கட்டடத்தில் வகுப்புகள் இயங்க தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments