சென்னையில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்..!

0 3341
சென்னையில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் ஏராளமான பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்..!

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் கொடுங்கையூர், எழில்நகர், எருக்கஞ்சேரி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

பெரம்பூர் பாரக்ஸ் சாலை, மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலை, வடபழனி குமரன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெறுகிறது.

இதே போல, கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூர் அருகேயுள்ள தாளங்குப்பத்தில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அதில் மக்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments