இந்தி நடிகர் ஷாருக்கானின் 57ஆவது பிறந்த நாள்.. வீட்டின் முன் திரண்ட ஏராளமான ரசிகர்கள் கூட்டம்..!

0 2732
இந்தி நடிகர் ஷாருக்கானின் 57ஆவது பிறந்த நாள்.. வீட்டின் முன் திரண்ட ஏராளமான ரசிகர்கள் கூட்டம்..!

இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கானின் 57-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நாளை முன்னிட்டு மும்பையில் தமது இல்லத்தின் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு கூடியிருந்த ரசிகர்களை அவர் சந்தித்தார். அப்போது, அவருடைய மகன் ஆப்ராமும் உடன் இருந்தார்.

கடந்த 1965 ல் பிறந்த ஷாருக்கான் இது வரை 80 படங் களில் நடித்துள்ளார். அவரை பாலிவுட்டின் பாட்ஷா என்று செய்தி ஏடுகள் குறிப்பிட்டு மகிழ்கின்றன.

கிங் ஆப் பாலிவுட் மற்றும் கிங் ஆப் கான் என்ற செல்லப் பெயர்களிலும் ரசிகர்கள் அழைத்து மகிழ்கின்றனர். ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments