ஷாருக்கானின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் அவரது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்..!

0 4045

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு மும்பையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு நள்ளிரவில் கூடியிருந்த ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்தார்.

இன்று ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி அவரை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் நேற்று இரவு கூடியிருந்தனர்.

இதனையடுத்து ஷாருக்கான் தனது மகன் ஆப்ராம் உடன் நள்ளிரவு வீட்டிற்கு முன்பு வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ஷாருக்கானை பார்த்ததும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்தால் ஆர்ப்பரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments