சட்ட விரோதமாக தமிழக மது பாட்டில்கள் அமோக விற்பனை..!

0 3288

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெளி மாநில மற்றும் தமிழக மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

பாலக்கோடு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் பற்றி தெரிந்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு மதுபானக்கடைகளில் மொத்த விற்பனை செய்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments