மதுரையில் பிறந்து 80 நாட்களே ஆன பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு - போலீசார் விசாரணை..!

0 4807
மதுரையில் பிறந்து 80 நாட்களே ஆன பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு - போலீசார் விசாரணை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து 80 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராஜா-கருப்பாயி தம்பதிக்கு, ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 80 நாட்களுக்கு முன், இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளன.

ஒரு ஆண், ஒரு பெண் என குழந்தைகள் பிறந்த நிலையில், பெண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, 23ஆம் தேதி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அக்குழந்தை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments