மதுபோதையில் அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட உள் நோயாளி.. முகப்பு கண்ணாடிகளை அடித்து நொருக்கி அட்டகாசம்..!

0 2593
மதுபோதையில் அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட உள் நோயாளி.. முகப்பு கண்ணாடிகளை அடித்து நொருக்கி அட்டகாசம்..!

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் மது போதையில் முகப்பு கண்ணாடி கதவை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

அறந்தாங்கியை சேர்ந்த செந்தில் குமார், கால் வலி காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று இரவு செவிலியர்களுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் வெளியே சென்று மது அருந்திவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவரை பிடிக்க முயன்றவர்களை செந்தில் குமார் தாக்கியதால், மருத்துவர்கள் அவருக்கு தூக்க ஊசி செலுத்தி சிகிச்சை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments