பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறு பேச்சு.. திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

0 4499
பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறு பேச்சு.. திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு..!

பாஜக பெண் நிர்வாகிகளை அவதூறாக பேசியதாக, தென்சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகி சைதை சாதிக் மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்மையில் சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை அவதூறாக பேசியதாக பாஜக மகளிரணி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.

அதன் பேரில், ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் சைதை சாதிக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments