சென்னையில் பெய்த கனமழையால் பல பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..!

சென்னையில் பெய்த கனமழையால் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரில் உள்ள தெருக்களிலும், புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையிலும், மண்ணடியில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. அதே போல, மெரினா கடற்கரை மணல்வெளி முழுவதும் மழை நீர் குளம் போல தேங்கியது.
பாரிமுனையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மழை நீரை அகற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
Comments