வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் சுற்றுலா பயணிகளுக்கும் - ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு

0 2813

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால், சுற்றுலா பயணிகளுக்கும் - ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments