பகத்சிங் நாடகத்திற்காக ஒத்திகை பார்த்தபோது கழுத்தில் கயிறு இறுக்கி சிறுவன் பலி..!

0 5608

கர்நாடகாவில் பகத்சிங் நாடகத்திற்காக வீட்டில் ஒத்திகை பார்த்தபோது, கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்தான்.

சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன், தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வந்தான்.

நாளை பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பகத்சிங் வேடம் அணிந்து, சஞ்சய் நடிக்க இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது பகத்சிங் தூக்கிலிடும் காட்சியை, அவன் நடித்து ஒத்திகையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முகத்தை துணியால் மூடி கழுத்தில் கயிறு கட்டி ஒத்திகை பார்த்தபோது, திடீரென கயிறு கழுத்தை இறுக்கியதாக சொல்லப்படும் நிலையில், சம்பவ இடத்திலேயே அவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான்.

இது குறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments