'லேப்டாப்'ஐ திருடியதற்காக உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட திருடன்..!

0 3994

தென் ஆப்ரிக்காவில், இளைஞர் ஒருவரின் லேப்டாப்பை திருடிய நபர், தனது செயலுக்கு மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பணக்கஷ்டத்தால் லேப்டாப்பை திருடியதாக அதில் தெரிவித்துள்ள அந்த நபர், லேப்டாப்பிலிருந்த உரிமையாளரின் ஆய்வறிக்கையை மின்னஞ்சலில் இணைத்துள்ளார்.

திங்கட்கிழமை மதியம் லேப்டாப்-ஐ விற்கப்போவதால், அதற்குள் வேறு ஏதேனும் முக்கியமான தரவுகளை அனுப்பவேண்டுமா என அக்கறையுடன் விசாரித்துள்ளார்.

தனது மின்னஞ்சல் முகவரியிலிருந்தே திருடன் அனுப்பிய மின்னஞ்சலை உரிமையாளர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments