குஜராத்திலுள்ள பிரமாண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை..!

0 2514

மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலின் 147வது பிறந்த தினத்தையொட்டி, குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள அவருடைய பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

சிலை இருக்கும் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி முதலில் பால் ஊற்றியும், பிறகு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பங்கேற்று பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments