கோயில் வளாகத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!

0 3125

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரிமுருகன் தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னராசு, புல்லட்ராஜா என்பவரின் மனைவி கிருஷ்ணவேணியுடன் கடந்த 29ம் தேதி இரவு கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் சின்னராசுவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் புல்லட்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் ஷேக் அப்துல்லா, அப்துல்கனி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments