டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து..!

0 3275

சேலம் அருகே, டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லட்சுமிபதி - ஜெயசுதா தம்பதி தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் ஆத்தூர் நோக்கி பொலிரோ காரில் சென்றுள்ளனர்.

காரை ஓம் சக்தி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். முத்தம்பட்டி அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் காருக்கு அடியில் சிக்கி அலறித் துடித்த 6 பேரையும் மீட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments