உயர் ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய இளைஞர் கைது..!

0 2501

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உயர்ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்யார் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஆற்காடு நகர போலீசார், சந்தேகத்துக்கிடமாக அவ்வழியாக வந்த இளைஞரை மடக்கி விசாரித்தனர்.

முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அந்த நபர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சூர்யா என்பதும், இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments