இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்து..!

0 2687

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, சாலையோரத்தில் உள்ள மின்மாற்றி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளிப்பட்டிலிருந்து 30 பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.

கே.ஜி.கண்டிகை அருகே எதிரில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் பேருந்தை மறுபுறம் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்மாற்றியில் மோதியது.

பராமரிப்பு பணி காரணமாக மின்மாற்றி செயலில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments