சீன கடன் செயலிகள்- சட்டவிரோத செயல்களை தடுக்க நடவடிக்கை.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 2645

சீன கடன் செயலிகள் மூலம்  சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சட்டவிரோதமான இத்தகைய செயலிகளால் குடிமக்களின் பாதுகாப்பு, தன்மானம் போன்றவற்றுடன் நாட்டின் பாதுகாப்பும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான புகார்களை நிபுணர்களை வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments