அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை - தி.மு.க. செய்தித்தொடர்பாளர்

0 2760

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை, காவல்துறையை களங்கப்படுத்துவது போல் உள்ளதாகவும், அவரது குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலத்தில் பேட்டியளித்த அவர், ஜமேசா முபின் குறித்த எந்த கடிதமும் தமிழக அரசுக்கு மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என்றார்.

மேலும், அரசியல் கட்சிகள் கோவை மாநகரில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மக்களிடம் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் ராஜீவ் காந்தி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments