சொத்து பிரச்சினைக்காக பெற்றோரை கொல்ல கூலிப்படையை ஏவிய மகன் உட்பட 5 பேர் கைது..!

0 2802

ஆந்திராவில் தந்தையை கொல்ல 3 லட்ச ரூபாயும், தாயையும் சேர்த்து கொன்றால் 5 லட்ச ரூபாயும் தருவதாக கூலிப்படையை நாடிய மகன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லூரை சேர்ந்த பாலகிருஷ்ணா தனது சொத்து முழுவதையும் அவரது இரண்டு மகன்களுக்கு பிரித்து கொடுத்த நிலையில், அண்ணனின் சொத்தையும் அடைய தம்பி லட்சுமி நாராயணா சதித்திட்டம் தீட்டினார்.

இதற்கு தந்தை, தாய் மற்றும் அண்ணன் தடையாக இருப்பதாக கருதி அவர்களை கொல்ல, ஷேக் ஷபியுல்லா என்பவரை நாடியுள்ளார்.

இந்நிலையில் திருட்டு வழக்கில் கைதான ஷேக் ஷபியுல்லாவின் நண்பர்கள் ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோரை விசாரிக்கும்போது, இதுகுறித்த விவரம் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மற்றொரு நண்பர் சுப்பாராவ் என்பவரையும் சேர்த்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments