இரவுக்குயிலால் இம்சையில் சிக்கிய இன்ஸ்டா ரீல்ஸ் நாயகன்..! 9 சவரன் அம்போ

0 4374

இன்ஸ்டாகிராம் தோழியுடன் கன்னியாகுமரியில் அறை எடுத்து தங்கிய கார் புரோக்கர் அயர்ந்து தூங்கியதை பயன்படுத்தி அவரது 9 சவரன் நகையுடன் தோழி மாயமானதால் நகையை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் அறை ஜோடி ஒன்று எடுத்து தங்கி உள்ளது. காலையில் அறையில் இருந்து வெளியே சென்ற அவர்கள் மாலையில் மீண்டும் விடுதி அறைக்குத் திரும்பினர்.

இரவு உணவுக்குப் பிறகு அறைக்குள் சென்ற பின்னர் வெளியே வரவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை அறையில் இருந்து அரக்கப்பரக்க வெளியே ஓடி வந்த ஆண் நபர், தன்னுடன் இருந்த பெண்ணையும், அறையில் கழட்டி வைத்த தனது 9 சவரன் நகைகளையும் காணவில்லை என்று கதறினார்.

2 பேர் மட்டும் அறையில் இருந்த நிலையில் நகை மாயமானது எப்படி? என கேட்டபோது தன்னுடன் வந்த பெண் தான் நகையை எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது நகையை இழந்தவர் 52 வயாதான இன்ஸ்டா ரீல்ஸ் நாயகன் ஆல்பர்ட் என்பதும் நெல்லை டவுணைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

கார் புரோக்கரான அவர், சமூக வலைதளங்களில் முப்பொழுதும் மூழ்கிகிடந்த போது இன்ஸ்டாகிராம் மூலம் சவுண்டு சத்யா என்ற மதுரை பெண் அறிமுகமாக் உள்ளார்.

கடந்த 3 மாதங்களாக சவுண்டு சத்தியாவுடன் இன்ஸ்டாகிராமில் டூயட் பாடி வந்த நிலையில் நேரில் சந்திக்கும் ஆவலுடன் அவரை கன்னியாகுமரி வரவழைத்துள்ளார்.

இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். அதன் பிறகு இரவு விடுதியில் ஒரே அறையில் தங்கி உள்ளனர். படுக்கையில் உறுத்தும் என்று. கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரங்களை கழட்டி வைத்துள்ளார் ஆல்பர்ட்

இரவு அயர்ந்து தூங்கிய நிலையில் சனிக்கிழமை காலை எழுந்து பார்த்தால் இன்ஸ்டா கிளி சத்யாவையும், தான் கழட்டி வைத்த 9 சவரன் நகைகளையும் காணவில்லை என்று போலீசிடம் புகார் தெரிவித்துள்ளார் ஆல்பர்ட்

மேலும் சத்யாவுடன் தான் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோவையும் போலீசாரிடம் ஆல்பர்ட் கொடுத்துள்ளார். அதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்தப் பெண் இரவே விடுதியில் இருந்து சென்று விட்டாரா? அல்லது அதிகாலையில் தான் சென்றாரா? என்பது குறித்து அங்குள்ள சிசிடிவிக்காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பெண் கூறிய பெயர், ஊர் உண்மை தானா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரித்தாலும் சிலர் அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு ஆப்பசைத்த குரங்காய் பிரச்சனைகளில் சிக்கித்தவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments