பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் டிரோன் விரட்டியடிப்பு

0 2759

பஞ்சாப் மாநில சர்வதேச எல்லை அருகே ஊடுருவிய பாகிஸ்தானின் டிரோனை, எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து, இந்திய எல்லை பகுதிக்குள் ட்ரோன் ஒன்று நுழைந்தது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படையினர், அந்த ட்ரோனை 18 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.

முன்னதாக, 27-ந்தேதி இரவு பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஒரு பையும், அதில் 6 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளையும் கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments