ஐநா.வின் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு

0 2958

ஐ.நா-வின் தரகுடன் நடைபெறும் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போர் காரணமாக கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தடைபட்டது.

துருக்கியின் உதவியுடன் ஐ.நா. நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் கருங்கடல் பகுதியில் வர்த்தகம் நடைபெற ரஷ்யா- உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், கிரிமியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பிரிட்டன் உதவி செய்ததாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments