''2047ல் இந்தியா, வளர்ந்த நாடு அந்தஸ்தை அடைவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு'' - பிரதமர் மோடி

0 2208

2047ஆம் ஆண்டில் இந்தியா, வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை அடைவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் இளைஞர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

குஜராத்தில் மத்திய அரசின் 'ரோஜ்கர் மேளா' எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காணொலியில் உரையாற்றிய பிரதமர், மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்க செயலாற்றி வருவதாகவும், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் இணைந்துள்ளதால், பணிவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments