வந்தே பாரத் ரயில் கால்நடைகள் மீது மோதியதில் முன்பகுதி உடைந்து சேதம்..!
மும்பை அருகே தண்டவாளத்தை கடந்த கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் மோதியதில், முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.
மும்பை சென்டிரலில் இருந்து குஜராத் மாநிலம் காந்திநகர் நோக்கி இன்று காலை ரயில் சென்று கொண்டிருந்தது.
அதுல் அருகே ரயில் வந்தபோது திடீரென கால்நடைகள் மீது மோதியது.
இதில் ரயில் முன்பகுதி லேசாக உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு ரயில் நிறுத்தப்பட்டு, பிறகு இயக்கப்பட்டது.
Comments