ஒரு வாரமாக வீடு பூட்டியிருந்ததை நோட்டம் விட்டு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

0 2872

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யாசாமி காலனி பகுதியை சேர்ந்த வெங்காடாச்சலம் கடந்த சில நாட்களாக இருதய நோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது மனைவி மற்றும் மகனும் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கும் நிலையில் அண்டை வீட்டார் இரவு நேரங்களில் வெங்கடாச்சலம் வீட்டு மின் விளக்கை போட்டு, காலையில் அணைத்து வந்துள்ளனர்.

இன்று காலை வழக்கம் போல் விளக்கை அணைக்க வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், வீட்டின் உரிமையாளருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments