16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

0 2672

சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கணவரை பிரிந்த பெண், 16 & 14 வயதுடைய 2 மகள் மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரது 16 வயது பெண் வயிற்று வலியால் அவதியுற்றதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன், திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், வெங்கடேசனின் அக்கா லலிதாவின் ஆண் நண்பர்கள் 3 பேர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் லலிதா, வெங்கடேசன் உள்ளிட்ட  6 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments