கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்விரோதம் காரணமாக மோதிக் கொண்ட விசிக - திமுக நிர்வாகிகள்

0 3735

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் இருதரப்பிரனர் இடையே ஏற்பட்ட மோதலில்  7 பேர் காயமடைந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி நகர விசிக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திகேயன் தரப்பினருக்கும், திமுக நிர்வாகி அருண்குமார் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு கத்தி, தடி, மற்றும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து 13 பேர் மீது  வழக்குப் பதிவு செய்த நிலையில்  கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments