கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக 4 பேரின் வீட்டில் போலீசார் சோதனை..!

0 2724

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 4 பேரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அசாருதீன், சார்ஜீத், ரிஸ்வான், இன்டியாஸ் ஆகிய 4 பேர் வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்த 4 பேர் மீது ஏற்கனவே வேறு சம்பவங்களில் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடத்தினர்.

பின்னர் 5 செல்போன்கள், 3 பென் டிரைவ் மற்றும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments