மெட்டல் டிடெக்டர் உதவியோடு வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன்னாலான சிலைகள் பறிமுதல் - 3 பேர் கைது..!

0 3222
மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் தோண்டியெடுத்து சிலை கடத்தல்.. போலீசிடம் சிக்கிய கும்பல் - 3 பேர் கைது..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மெட்டல் டிடெக்டர் உதவியோடு பூமிக்கு அடியில் உள்ள ஐம்பொன் சிலைகளை தோண்டியெடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாஜ்புரா சத்யா நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ஐம்பொன்னாலான சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரின் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 6 சிலைகளை பறிமுதல் செய்தனர்.

சாமி சிலைகளை கடத்தியதாக காய்கறி வியாபாரி பாலாஜி மற்றும் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தினேஷ், முரளி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments