மதுபோதையில் வாய்த்தகராறு : நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றில் வீசிய இளைஞர் கைது..!

0 2654
மதுபோதையில் வாய்த்தகராறு : நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றில் வீசிய இளைஞர் கைது..!

ஓசூர் அருகே மதுபோதையில் நண்பனை கத்தியால் குத்திக் கொலை செய்து கிணற்றில் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசவனபுரம் கிராமத்திலுள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவ்விடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.

தொழில்முறையில் நண்பர்களான பசவனபுரம் கிராமத்தைச் சேர்ந்த பீர்கான், மஞ்சுநாத், ராஜேந்திரன் ஆகிய மூவரும் தீபாவளியன்று இரவு சந்தித்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், படுகாயமடைந்த ராஜேந்திரனை மற்ற இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

அங்குள்ள தோட்டத்தில் மறைந்திருந்த பீர்கான் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments