ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படை ஏவி கணவனை கொன்ற மனைவி.. 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு..!

0 3936
ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படை ஏவி கணவனை கொன்ற மனைவி.. 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆண்நண்பருடன் இணைந்து கூலிப்படையை ஏவி மனைவியே கணவனை கொல்ல முயற்சித்த சம்பவத்தில் படுகாயமடைந்த முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மாரிமுத்து என்பவருக்கும், அவரது மனைவி கவிதா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 17-ந்தேதி இரவு வீட்டில் இருந்த மாரிமுத்துவை கவிதாவின் ஆண்நண்பர் சங்கர் கூலிப்படையுடன் இணைந்து கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த மாரிமுத்து வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் முன்னதாக கைது செய்யப்பட்ட ராணுவ வீரரின் மனைவி உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments