19 சதவீதம் வரை ஈரப்பத நெல் கொள்முதலுக்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி..!

0 2323

19% வரை ஈரப்பதமுள்ள நெல்லினை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து மத்தியக் குழுவினர், தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், மத்திய அரசுக்கு குழுவினர் அளித்த பரிந்துரையின்படி, ஈரப்பத அளவை 19 சதவீதம் ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments