''கோவை மாவட்டத்தில் பந்த் நடத்த மாநில தலைமையால் அழைப்பு விடுக்கப்படவில்லை'' - அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

0 2820

கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாவட்டத்தில் பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்றும் பந்த் அல்லது வேறு வகை போராட்டம் நடத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பா.ஜ.க. அழைப்பு விடுத்த முழு அடைப்பிற்கு தடைக்கோரி வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதன் விசாரணையில், பந்த் குறித்து மாவட்ட நிர்வாகிகள் அறிவித்திருக்கலாம் என்றும், அதனை அங்கீகரிக்கவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் நடந்தால் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments