சிங்கப்பூரில் 40 அடி நீளம், 15 அடி உயர "டைரனோசரஸ் ரெக்ஸ்" எலும்புக்கூடை காண ஆயிரக்கணக்கானோர் ஆவலுடன் திரண்டனர்..!

0 2761

சிங்கப்பூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 40 அடி நீள டைனோசர் எலும்புக்கூடை காண ஆயிரக்கணக்கானோர் ஆவலுடன் திரண்டனர்.

சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்த டைரனோசரஸ் ரெக்ஸ்  இன டைனோசரின் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஹாங் காங்கில் ஏலம் விடப்படுகிறது.

இம்மாத இறுதியில், 1,400 கிலோ எடையிலான இந்த எலும்புக்கூடு கப்பல் மூலம் ஹாங் காங் அனுப்பப்பட உள்ளது. இதற்கு முன் இதே போன்ற டைரனோசரஸ் ரெக்ஸ் ரக டைனோசரின் எலும்புக்கூடு சுமார் 262 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவில் ஏலம் போயுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments