பெண் வேடமிட்டு வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து திருட வந்த நபருக்கு போலீசார் வலைவீச்சு..!

0 2186

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, பெண் வேடமிட்டு பட்டப்பகலில் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, திருட வந்த நபரை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டாபிராமபுரம் கோகுல்கார்டனைச் சேர்ந்த வேல்குமார், தாம் நடத்தும் பூச்சி மருந்து கடைக்கு சென்றுள்ளார். அவரது வீட்டு அருகே, மர்மநபர் நடமாடுவதாக தகவல் வந்தததையடுத்து, வீட்டுக்கு வந்து சிசிடிவி காட்சியை பரிசோதித்துள்ளார்.

அப்போது சேலை கட்டிக்கொண்டு,முகத்தை மூடி மறைத்தபடி ஒருவர் காம்புவண்டு சுவர் ஏறி குதித்ததை கண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments