2 நீண்ட தூர ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா..!

0 1913

வடகொரியா இன்று மீண்டும் 2 நீண்ட தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் இணைந்து நடத்திய 12 நாள் கடற்படை ஒத்திகை, அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை, அந்த 2 நாடுகளும் பிரமாண்ட விமானப்படை ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் வடகொரியா 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. தென்கொரிய ராணுவமும் இந்த சோதனையை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments