பொங்கலுக்கு ரிலீஸாகும் நடிகர் அஜித்தின் துணிவு..! விஜய்யின் வாரிசுடன் நேருக்கு நேர் மோதுவதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு

0 3172

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில்,மஞ்சுவாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என, படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கல் அன்று அஜித்குமார், விஜய்யின் படங்களும் நேருக்கு நேர் மோதுவதால், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments