மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமான 2 பேருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம்

0 2345

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று குணமாகி ஊழியர்களாக வேலை பார்த்த 2 பேர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

மன நல மருத்துவமனை ஊழியர்களாக பணியாற்றிய மகேந்திரன், தீபா ஆகியோர் காதலித்து வந்தனர். அவர்கள் திருமணத்துக்கு மருத்துவமனை ஊழியர்களே ஏற்பாடு செய்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தற்காலிக பணி நியமனத்துக்கான ஆணையையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments