அமைச்சர் செந்தில்பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது.. வானதி சீனிவாசன்

0 3417
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மிரட்டலுக்கு பாஜக அஞ்சாது என அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை மீது, செந்தில்பாலாஜி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

கோவை சம்பவத்தை கேஸ் சிலிண்டர் வெடிப்பு எனக் கூறி மறைக்க பார்த்ததாகவும், பாஜக அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே உண்மை வெளிவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவையில் எந்த பதற்றமும் இல்லை என்றும், பாஜகதான் அரசியல் செய்வதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், எந்த பதற்றமும் இல்லை என்றால் எதற்காக கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments