இருக்கையில் அமரச்சொன்னதால் பெண் பேருந்து ஓட்டுநர், பள்ளி மாணவி இடையே மோதல்..!

0 2488

அமெரிக்காவில், பெண் பேருந்து ஓட்டுநரும், 7-ம் வகுப்பு மாணவியும் பள்ளி பேருந்துக்குள் மாறிமாறி தாக்கிக்கொள்ளும் காணொலி இணையத்தில் வைரலானது.

டெட்ராய்ட் நகரில், பள்ளி பேருந்தில் ஏறிய 12 வயது சிறுமி, வெளியே நின்ற தனது சகோதரனை பார்த்து கையசைத்தபோது, பெண் பேருந்து ஓட்டுநர் சிறுமியை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

பேருந்து ஓட்டுநர் முதலில் தாக்கியதாக மாணவியும், மாணவி முதலில் தாக்கியதாக பெண் ஓட்டுநரும் புகாரளித்துள்ளனர். பெண் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments