தொழிலதிபர் வீட்டிற்குள் திருடச்சென்ற நபர் தூக்கிட்டு தற்கொலை..!

0 2788

பெங்களூருவில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து திருடச்சென்ற நபர், அங்கேயே குளித்து முடித்து, சாமி கும்பிட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஐஷ்ராமி, கடந்த வாரம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று, நேற்று வீடு திரும்பிய போது, வீட்டில் நபர் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்ததைபார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.

புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்த நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த திலீப் குமார் என்பதும், அவர் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments