"குழந்தைகளை ஆட்டோக்கள் மூலம் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது" - நீதிமன்றம் கேள்வி

குழந்தைகளை ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்கள் மூலம் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
குழந்தைகளை ஆட்டோக்கள் மற்றும் ரிக்ஷாக்கள் மூலம் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன, ஆனால் ஆட்டோ, ரிக்ஷாக்கள் மூலம் பள்ளிக்கு வரும் வாகனங்களுக்கு என்ன விதிமுறைகள் உள்ளது என கேள்வி எழுப்பினர்.
மேலும், இது முக்கிய பிரச்சனை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், அனைத்து பள்ளிகளும் வாகன விதிகளை முறையாக பின்பற்ற, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Comments