அனுமதியில்லாமல் டிரோன்கள் பறந்தால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை..!

0 2074

சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், சினிமா, கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளின் போது காவல்துறையின் அனுமதியுடன் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்துமாறும், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிப்பாட்டு தலங்கள், தேசிய பூங்கா உள்ளிட்ட இடங்களில் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments