கார் வெடிப்பு வழக்கில் கைதான அப்சர் கானுக்கு நவ.10 வரை நீதிமன்ற காவல்..!

0 2074

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர் கானை நவம்பர் 10-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உக்கடம் அருகே கடந்த 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜமேசா முபினின் கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்த தனிப்படை போலீசார் சிறையிலடைத்தனர்.

தொடர்ந்து, 6-வது நபராக அப்சர் கான் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்த போலீசார், ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் வீட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments